வெளியானது 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை!

இன்று காலை 9.30 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 10,11,12 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். அதன்படி இந்த வருடம் நடக்க உள்ள பொதுத்தேர்வுக்கான (Annual Exam Timetable) அட்டவணையை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதை இங்கே காணலாம்.

அதன்படி 10-ம் வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதியும், 12-ம் வகுப்புக்கு மார்ச் 1-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 4-ம் தேதியும் தொடங்கவுள்ளது. மேலும் மே 6-ம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும். 12-ம் வகுப்புக்கு மே 6-ம் தேதி தேதியும், 10-ம் வகுப்புக்கு மே 10-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மே 14-ம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. மற்றும் செய்முறை தேர்வுகள் (Practical Exam) பிப்பரவரி மாதம் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுக்கான முழு அட்டவணையும் இப்பதிவில் காணலாம்

செய்முறைத் தேர்வு :

10-ம் வகுப்பு : பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி – பிப்ரவரி 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.

11-ம் வகுப்பு : பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி – பிப்ரவரி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

12–ம் வகுப்பு : பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி – பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பொதுத்தேர்வு அட்டவணை :

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு :

26.03.24 – தமிழ் மற்றும் இதரமொழிப்பாடங்கள்

28.03.24 – ஆங்கிலம்

01.04.24 – கணிதம்

04.04.24 – அறிவியல்

06.04.24 – விருப்பமொழி பாடம்

08.04.24 – சமூக அறிவியல்.

>> தேர்வு முடிவுகள் – மே 10-ம் தேதி

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு :

04.03.24 – தமிழ் மற்றும் இதரமொழிப்பாடங்கள்

07.03.24 ஆங்கிலம்

12.03.24 – இயற்பியல், பொருளியல்

14.03.24 – கணினி அறிவியல், புள்ளியியல்

18.03.24 – உயிரியல், தாவரவியல், வரலாறு

21.03.24 – வேதியியல், கணக்குபதிவியல்

25.03.24 – கணிதம், வணிகவியல்

>> தேர்வு முடிவுகள் – மே 14-ம் தேதி

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு :

01.03.24 – தமிழ்

05.03.24 – ஆங்கிலம்

08.03.24 – கணினி அறிவியல் , புள்ளியியல்

11.03.24 – வேதியியல், கணக்குபதிவியியல், புவியியல்

15.03.24 – இயற்பியல் , பொருளியல், கணினி தொழில்நுட்பம்

19.03.24 – கணிதம், வணிகவியல், விலங்கியல், நுண் உயிரியல்

22.03.24 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்,பேஸிக் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், பேஸிக் சிவில் பொறியியல்,பேஸிக் ஆட்டோமொபைல் பொறியியல், பேஸிக் மெக்கானிக்கல் பொறியியல்,டெக்ஸ்டைஸ் டெக்னாலஜி, ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் செக்ரட்டரிஷிப்

>> தேர்வு முடிவுகள் – மே 6-ம் தேதி

Click Here to Join:

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments