கூகுள் பே மூலமாக இனி ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்போதெல்லாம் நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் அதிகம் ஆகிவிட்டது. முக்கியமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவது அதிகம் ஆகிவிட்டது. சாதாரணமாக டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை பின்பற்றுகிறார்கள்.
இதன் காரணமாக நேர விரயம் குறைகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் சார்ஜ் இல்லை. அதோடு உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. கையில் எப்போதும் பணத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் யுபிஐ பேமெண்ட் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது.
எங்கும் யுபிஐ; அனைத்து விதமான சேவைகளுக்கும் தற்போது யுபிஐ பயன்பாடு வந்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சாதாரண சாலையோர கடைகளுக்கு கூட யுபிஐ வந்துவிட்டது. அதேபோல் பெரிய பெரிய அரசு நிறுவனங்கள் கூட யுபிஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் தற்போது யுபிஐ சேவையை வழங்குகின்றன. மக்களும் யுபிஐ பயன்பாட்டை வெகுவாக விரும்ப தொடங்கிவிட்டனர்.
கட்டணம் விதிப்பு; இந்த நிலையில் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு சிறிய அளவிலான சேவை வரிகளும் கூட விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைக்கு மேல் செய்கையில் வங்கியில் இருந்து அதற்கான பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2000 ரூபாய்க்கு மேல் யுபிஐ முறையில் பணம் அனுப்பினால் இந்த கட்டணம் பொருந்தும்.
அதன்படி வணிக பரிவர்த்தனைக்கு ஒரு கடைக்காரர் ப்ரீபெய்டு முறையில்.. அதாவது வாலட் முறையில் பணம் செலுத்தினாலோ, ப்ரீபெய்டு கார்ட் முறையில் பணம் செலுத்தினாலோ அதற்காக 0.5 சதவிகிதம் முதல் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். மக்கள் சிலர் இப்போது வாலட் மூலம் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த வாலட் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு அதிகபட்சம் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. துறை ரீதியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் சதவிகிதம் மாறும். எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%, Mutual Fund, அரசு, காப்பீடு, ரயில்வேக்கு 1% ஆக கட்டணம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
ரீசார்ஜ் வசூல்; கூகுள் பே மூலமாக இனி ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் பே மூலம் செய்யப்படும் ரீசார்ஜ் பிளான்களுக்கு 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுவாரசிய ஆய்வு; இந்த நிலையில்தான் யுபிஐ பேமெண்ட் மூலம் பணம் செலுத்தும் நபர்கள் குறித்த சுவாரசிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. வாஷிங்டனில் இருக்கும் University of Puget Sound மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 21,457 பேரிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. யுபிஐ மூலம் அவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள் என்று இந்த ஆய்வில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.