தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பல்வேறு காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 413 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, இந்த பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வானது கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்காக நடத்தப்பட்ட முதன்மை தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தற்பொழுது குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்து TNPSC தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2ஏ தேர்வின் மூலமாக கூடுதலாக 620 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 5 ஆயிரத்து 860 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை அறிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.