புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு:
- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
- இவர்களுக்கு குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படுத்தி வரும் ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்நிலையில் நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிகளுக்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் நேரடியாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீடு அட்டைதாரர்களில் ஒரு நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ₹500 மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப நபர்களைக் கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹ 1000 நேரடியாக வங்கி கணக்கின் மூலம் ஜனவரி 4, 2024 அன்று செலுத்தப்படும்.
- இத்திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக அரசுக்கு ரூபாய் 12.29 கோடி கூடுதல் செலவாகும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோல் குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை திட்டத்தில் விண்ணப்பித்திருந்த தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான உதவித்தொகை பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.