பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூ.600 க்கு சிலிண்டரை பெறுவது எப்படி என்பது தொடர்பான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சிலிண்டரின் விலை:
இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் அதிகமான நுகர்வோர்கள் குறைவான விலையில் கேஸ் சிலிண்டர்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
மேலும், மத்திய அரசின் சார்பில் ரூ. 300 மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்த மூன்று ஆண்டிற்குள் கூடுதலாக 75 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10.35 கோடியாக உயரும்.
தற்போது எப்படி பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களை பெறுவது என்பது குறித்து காணலாம்.
முதலில் www.pmuy.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று PMUY இணைப்புக்கு விண்ணப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர், நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் சிலிண்டரை தேர்வு செய்து ஆவணங்களுடன் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவும்.
நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் ரூ.600 க்கு சிலிண்டர் வாங்க தகுதி பெற்றவர் எனில் சில நாட்களில் அதற்கான பலனை பெறலாம்.