You are currently viewing தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை அரசு நிதியுதவி: பலருக்கும் தெரியாத சூப்பர் திட்டம்!!!

தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வரை அரசு நிதியுதவி: பலருக்கும் தெரியாத சூப்பர் திட்டம்!!!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக புதியதாக தொழில் தொடங்குவற்கு உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotherapy Clinic) அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

உடற்பயிற்சி சிகிச்சை மையம் (Physiotherapy Clinic) தொடங்க தனியார் நிறுவனம் மூலமாக சொந்தமாக கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கும் மற்றும் இடம் இல்லாதவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்து தரப்படும்.

மேலும் , உடற்பயிற்சி சிகிச்சை மைய ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், அத்தொழில் தொடங்குவதற்கான திட்டஅறிக்கை தயார் செய்து இலவச ஆலோசானைகளுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதற்கான உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) முற்றிலுமான விலக்கு அளிக்கப்படும்.

உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy) பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

தகுதியுள்ள நபர்கள் புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy) பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்தொழிலுக்கு ரூ.6.00 இலட்சம் திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35% அல்லது அதிகபட்சம் ரூ.2.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

பயனாளிகள் 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, தமிழ்நாடு மாவட்டத்தை சார்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தாட்கோ இணையதள www.tahdco.com என்ற   முகவரியில் பதிவு செய்யலாம்.

முழு விவரங்கள் தெரிந்து கொள்ள அந்தந்த மாவட்டட்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments