தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிபபை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 6244 பணி இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான இந்த தேர்வு மிகுந்த போட்டி நிறைந்ததாக இருக்கும். இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் நிலையில் இந்தாண்டும் பல லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரசு பணி மீதான மோகம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இந்தாண்டு நடக்க உள்ள தேர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விவரங்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் அவற்றை மார்ச் 4 முதல் மார்ச் 6 ஆம் தேதிக்குள் அதனை செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 15லட்சத்துக்கும் அதிமானோர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது.
தமிழில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் கட்டாயம் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவை தவிர்த்து பொதுவான கேள்விகளாக 75 கேள்விகள் இருக்கும், இவை தவிர்த்து ஆப்டிடியூட் எனப்படும் கேள்விகள் 25 இடம்பெறும் , மொத்தமாக 200 கேள்விகள் இடம்பெறும். அதற்கு மொத்தமாக 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 3 மணி நேரம் நடைபெற உள்ள இந்த தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாவது அடிப்படையிலான கேள்விகள் இடம்பெற உள்ளன. ஓஎம்ஆர் எனப்படும் சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது. தேர்வறைகளுக்குள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இதேபோல் கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணமாக வெறும் 100 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு கட்டணத்தில் சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Tamil Nadu Public Service Commission
பணியின் பெயர்∶
TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Combined Civil Services Examination – IV (Group-IV Services) VAO and Various பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Combined Civil Services Examination – IV (Group-IV Services) VAO and Various பணிக்கான 6244 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SI No | Name of the Post and Post Code No. | Name of the Service and Service Code No. | Number of vacancies |
1. | Village Administrative Officer | Tamil Nadu Ministerial Service | 108 |
2. | Junior Assistant (Non-Security) | Tamil Nadu Ministerial /Judicial Ministerial Service | 2442 |
3. | Junior Assistant (Security) | Tamil Nadu Ministerial Service | 44 |
4. | Junior Assistant | Tamil Nadu Corporation for Development of Women Ltd., | 10 |
5. | Junior Assistant | Tamil Nadu Waqf Board | 27 |
6. | Junior Assistant | Tamil Nadu Water Supply and Drainage Board | 49 |
7. | Junior Assistant | Tamil Nadu Small Industries Corporation Ltd., | 15 |
8. | Junior Assistant | Tamil Nadu Text Book and Educational Services Corporation | 07 |
9. | Typist | Tamil Nadu Medicinal Plant Farms and Herbal Medicine Corporation | 10 |
10. | Typist | Tamil Nadu Ministerial / Judicial Ministerial / Secretariat / Legislative Assembly Secretariat Service | 1653 |
11. | Typist | Tamil Nadu Corporation for Development of Women Ltd., | 03 |
12. | Typist | Tamil Nadu Small Industries Corporation Ltd. | 03 |
13. | Typist | Tamil Nadu State Marketing Corporation Ltd., | 39 |
14. | Typist | Tamil Nadu Text Book and Educational Services Corporation | 07 |
15. | Steno-Typist (Grade – III) | Tamil Nadu Ministerial / Judicial Ministerial Service | 441 |
16. | Steno-Typist | Tamil Nadu Corporation for Development of Women Ltd., | 02 |
17. | Steno-Typist | Tamil Nadu Text Book and Educational Services Corporation | 02 |
18. | Personal Assistant to Chairman (Steno Typist II) | Tamil Nadu Corporation for Development of Women Ltd., | 01 |
19. | Personal Clerk to Managing Director/General Manager (Steno Typist III) | Tamil Nadu Corporation for Development of Women Ltd., | 02 |
20. | Private Secretary (Grade-III) | Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., | 04 |
21. | Junior Executive (Office) | Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., | 34 |
22. | Junior Executive (Typing) | Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., | 07 |
23. | Receptionist – Telephone Operator | Tamil Nadu Corporation for Development of Women Ltd., | 01 |
24. | Milk Recorder, Grade III | Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., | 15 |
25. | Laboratory Assistant | Tamil Nadu Forensic Science Subordinate Service | 25 |
26. | Bill Collector | Tamil Nadu Ministerial Service / Town Panchayat Department | 66 |
27. | Senior Factory Assistant | Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Ltd., | 49 |
28. | Forest Guard | Tamil Nadu Forest Subordinate Service | 171 |
29. | Forest Guard with Driving Licence | Tamil Nadu Forest Subordinate Service | 192 |
30. | Forest Watcher | Tamil Nadu Forest Subordinate Service | 526 |
31. | Forest Watcher (Tribal Youth) | Tamil Nadu Forest Subordinate Service | 288 |
32. | Junior Inspector of Cooperative Societies | Tamil Nadu Cooperative Subordinate Service | 01 |
Total | 6244 |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 28-02-2024
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 42 (பிரிவுகளுக்கு ஏற்ப) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பதவிகளுக்கு வயது வரம்பு கிடையாது.
கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியினர் இளைஞர்கள்) ஆகிய பதவிகள் நீங்கலாக அனைத்து பதவிகளுக்கும் 01.07.2024 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டாளர்களுக்கு அரசு விதிகளின்படி உயர் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி∶
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- மேலும், Steno-Typist (Grade – III) பதவிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பள விவரங்கள்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு அவரவர் பணிக்கு ஏற்ப குறைந்த பட்சம் ரூ.16,600 முதல் அதிகபட்சம் ரூ.75,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.
1. Village Administrative Officer – Tamil Nadu Ministerial Service – Rs.19,500 – 71,900 (CPS)2. Junior Assistant (Security) – Tamil Nadu Ministerial Service – Rs.19,500 – 71,900 (CPS)3. Junior Assistant (Security) – Tamil Nadu Ministerial Service – Rs.19,500 – 71,900 (CPS)4. Junior Assistant – Tamil Nadu Text Book and Educational Services Corporation – Rs.19,500 – 62,000 (EPF)/-5. Junior Assistant – Tamil Nadu Water Supply and Drainage Board – Rs.19,500 – 62,000 (EPF)/-6. Junior Assistant – Tamil Nadu Small Industries Corporation Ltd., – Rs.19,500 – 62,000 (EPF)/-7. Junior Assistant – Tamil Nadu Waqf Board – Rs.19,500 – 62,000 (EPF)/-8. Junior Assistant – Tamil Nadu Corporation for Development of Women Ltd., – Rs.19,500 – 62,000 (EPF)/-9. Junior Assistant – Tamil Nadu Medicinal Plant Farms and Herbal Medicine Corporation Ltd., – Rs.19,500 – 71,900 (EPF)10. Typist – Tamil Nadu Ministerial / Judicial Ministerial / Secretariat / Legislative Assembly Secretariat Service – Rs.19,500 – 71,900 (EPF)11. Typist – Tamil Nadu Corporation for Development of Women Ltd., – Rs.19,500 – 62,000 (EPF)12. Typist – Tamil Nadu Small Industries Corporation Ltd., – Rs.19,500 – 62,000 (EPF)13. Typist – Tamil Nadu State Marketing Corporation Ltd., – Rs.19,500 – 71,900 (EPF)14. Typist – Tamil Nadu Text Book and Educational Services Corporation – Rs.19,500 – 62,000 (EPF)15. Steno-Typist (Grade III) – Tamil Nadu Ministerial / Judicial Ministerial Service – Rs.20,600 – 75,900 (CPS)16. Steno Typist – Tamil Nadu Text Book and Educational Services Corporation – Rs.20,600 – 65,500 (EPF)17. Steno Typist – Tamil Nadu Corporation for Development of Women Ltd., – Rs.20,600 – 65,500 (EPF)18. Personal Clerk to Managing Director/ General Manager (Steno Typist III) – Tamil Nadu Corporation for Development of Women Ltd., – Rs.20,600 – 65,500 (EPF)19. Personal Assistant to Chairman (Steno Typist II) – Tamil Nadu Corporation for Development of Women Ltd., – Rs.19,500 – 62,000 (EPF)20. Private Secretary Grade-III – Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Ltd., – Rs.20,600 – 65,500 (@)21. Junior Executive (Office) – Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Ltd., – Rs.19,500 – 62,000 (EPF)22. Junior Executive (Typing) – Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Ltd., – Rs.19,500 – 62,000 (@)23. Receptionist – Telephone Operator Tamil Nadu Corporation for Development of Women Ltd., – Rs.19,500 – 62,000 (EPF)24. Milk Recorder, Grade III – Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Ltd., – Rs. 18,200 – 57,900 (@)25. Laboratory Assistant – Tamil Nadu Forensic Science Subordinate Service – Rs.19,500 – 71,900 (CPS)26. Bill Collector – Tamil Nadu Ministerial Service – Rs.19,500 – 71,900 (CPS)27. Senior Factory Assistant – Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Ltd., – Rs.15,900 – 50,400 (@)28. Forest Guard – Tamil Nadu Forest Subordinate Service- Rs.18,200 – 57,900 (CPS)29. Forest Guard with Driving Licence – Tamil Nadu Forest Subordinate Service – Rs.18,200 – 57,900 (CPS)30. Forest Watcher – Tamil Nadu Forest Subordinate Service- Rs.16,600 – 52,400 (CPS)31. Forest Watcher (Tribal Youth) – Tamil Nadu Forest Subordinate Service – Rs.16,600 – 52,400 (CPS)32. Junior Inspector of Cooperative Societies – Tamil Nadu Cooperative Subordinate Service – Rs.20,600 – 75,900 (CPS) |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Offline Exam
- Document Verification
- Interview
விண்ணப்பக் கட்டணம்:
- ஒரு முறை பதிவு கட்டணம் – ரூ. 150/- (இது முறை செலுத்தினால் 5 வருடங்களுக்கு செல்லும்)
- தேர்வுக் கட்டணம் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை∶
தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.01.2024 முதல் 28.02.2024 வரை தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (tnpsc.gov.in/-) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
சரியானதா அல்லது தவறானதா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28-02-2024
வேறு எந்த பயன்முறை விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
Click Here to Join: