இனி கூகுள் பே மூலமாக ரூ.20000 வரைக்கும் கடன் வாங்கலாம்.. எப்படி தெரியுமா?

கூகுள் பே ஆப் மூலம் இப்போது ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கலாம். அது எப்படி என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

Google Pay:

கடந்த வருடம் கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, நிறுவனம் இந்தியாவில் உள்ள வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு சாசெட் கடன்களை வழங்குவதாகக் கூறியது. இது Gpay பயன்பாட்டில் பெறலாம் என்று தெரிவித்திருந்தது.

Google Pay Loan:

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் கட்டணச் சேவை வழங்குனர்களில் ஒன்றான Google Pay, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (NBFCs) கைகோர்ப்பதன் மூலம் இந்தியாவில் உள்ள நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்காக கடன் சார்ந்த தயாரிப்புகளின் வரம்பை வெளியிடுவதாகக் கூறியிருந்தது.

Sachet Loans:

கடன் சேவைகளை வழங்க தொழில்நுட்ப நிறுவனமான DMI ஃபைனான்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் கொண்ட ரூ.10,000 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான சிறிய டிக்கெட் கடன்கள் சச்செட் கடன்களாகும்.

Retail Loans:

இவை ரூ. 15,000 முதல் தொடங்கும் மற்றும் ரூ. 111 முதல் EMI களில் திருப்பிச் செலுத்தலாம். கடன் சேவைகளை வழங்குவதற்கு தொழில்நுட்ப நிறுவனமான DMI Finance உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது வணிகர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் கடன் உதவி செய்ய ஆரம்பித்துள்ளது.

Personal Loans:

கூகுள் பேவில் உள்ள க்ரெடிட் லைன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கலாம். இப்போது ஸ்டேட் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியவற்றுக்கும் மட்டும் உள்ளது. தகுதி வாய்ந்த நபர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments