இந்த டிஜிட்டல் யுகத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. பல நிறுவனங்கள் இதுபோன்று வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்வதையும் பார்த்திருப்போம். அந்த வகையில், எந்த ஒரு முதலீடும் இல்லாமல்,
இந்த டிஜிட்டல் யுகத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. பல நிறுவனங்கள் இதுபோன்று வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்வதையும் பார்த்திருப்போம். அந்த வகையில், எந்த ஒரு முதலீடும் இல்லாமல், பணியிடங்களுக்கு செல்லும்போது இடமாற்றத்திற்கான செலவுகள் இல்லாமல் வீட்டில் இருந்தே மாத வருமானத்தை நம்மால் உறுதி செய்ய முடியும். இதற்கான வழிகளை தான் இந்த கட்டுரை இன்று எடுத்துரைக்கிறது. இதில் ஏதேனும் ஒரு வேலை உங்களுக்கு உகந்தாக இருக்கலாம். அவற்றை தேர்வு செய்து பணியைத் தொடங்க ஆயத்தமாகுங்கள்.
1 – பகுதிநேர பணியாளர் அல்லது ஃபிரிலான்ஸ் ரைட்டிங்
இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு!
வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும். இந்த வேலையில் வாயிலாக எழுத்துக்களை நீங்கள் பணமாக மாற்ற முடியும். பல நிறுவனங்களும் இதற்கான ஆள் தேவை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இணையத்திற்காக சிறந்த முறையில் எழுத முடியும் என்றால், இது உங்களுக்கான வேலை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இதற்கென பிரத்யேகமாக சில தளங்களும் உள்ளன. அவை அப்வொர்க் (Upwork), ஃபிவர் (Fiverr), கண்டென்ட் மார்ட் (Content Mart) போன்றவை ஆகும்.
2 – விர்ச்சுவல் அசிஸ்டன்ஸ்
வீட்டில் இருந்தபடியே சிலர் அல்லது நிறுவனத்திற்காக வேலை பார்க்கலாம். அவர்கள் வேலைப்பளுவைக் குறைக்கும் வகையில் நம் விர்ச்சுவல் அசிஸ்டன்ஸ் ஆக பணியாற்றலாம். இதில் டேட்டா எண்ட்ரி, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டமிடல்கள், அவர்களது வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவது போன்றவை அடங்கும்.
3- ஆன்லைன் கல்வி
நீங்கள் எதில் சிறந்தவராக இருக்கிறீர்களோ, அதை பிறருக்குக் ஆன்லைன் வழியாகக் கற்றுக்கொடுத்து பணம் சம்பாதிக்கலாம். இதற்காக செக் டியூட்டர்ஸ் (Chegg Tutors), டியூட்டர்.காம் (tutor.com) போன்ற பலத் தளங்கள் உள்ளன.
4- அஃபிலேட் மார்க்கெட்டிங்
உங்களை சமூக வலைத்தளங்களில் அதிக நபர்கள் பின்தொடர்கிறார்கள் என்றால் அமேசான், கிளிக்பேங்க், ShareASales போன்ற தளங்களில் அஃபிலேட்டாக கணக்கு தொடங்குங்கள். அதில் நம்பகத்தன்மை மிக்க பொருள்களை அவர்கள் தரும் இணைப்பு வாயிலாக பிரபலப்படுத்துங்கள். அந்த இணைப்பின் வாயிலாக வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நல்ல கமிஷன் கிடைக்கும்.
5- கிராஃபிக் டிசைன்
கணினி கிராஃபிக் வடிவமைப்பில் உங்களுக்கு திறன் இருந்தால், கேன்வா, ஃபிவர் போன்ற தளங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்களைப் பெற முடியும். இதற்காக உங்களுக்கு டாலர்களில் கட்டணம் செலுத்தப்படும்.
6- டிஜிட்டல் பொருள்கள்
இ-புக்ஸ், பலருக்கு உபயோகப்படும் கோப்புகள், ஆன்லைன் கல்வி டேட்டாக்கள் உங்களிடம் இருந்தால் அதை விற்று வருவாய் ஈட்டலாம்.
7- மைக்ரோ டாஸ்கிங்
அமேசான் மெக்கானிக்கல் டர்க், கிளிக் வொர்க்கர் போன்ற தளங்களில் கொடுக்கப்படும் சிறு வேலைகளை செய்து தேவையான சிறு வருவாயைப் பெறலாம். நீங்கள் சமர்ப்பிக்கும் வேலைகளின் தரத்தைப் பொறுத்தே சிறந்த வேலைகள் உங்களைத் தேடி வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
8- சோசியல் மீடியா மேனேஜ்மென்ட்
நீங்கள் சமூக வலைத்தளங்கள் குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தால், பெரும்பாலான பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் சமூக வலைத்தளக் கணக்குகளை நிர்வகிக்கும் வேலையைப் பார்க்கலாம். இதற்காக சிறந்த மாத ஊதியங்களையும் பெறலாம்.
9- ஆன்லைன் ஆய்வுகள் மற்றும் சந்தை ஆராய்ச்சி
ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து சரியான கருத்துகளை வழங்கமுடியும் என்றால், இதன் வாயிலாகவும் பணம் சம்பாதிக்கலாம். இதற்கென Swagbucks, Survey Junkie, Vidale Research போன்ற தளங்கள் இருக்கின்றன.
10- வாடிக்கையாளர் சேவை
சில நிறுவனங்களுக்கு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பது மிகப்பெரும் சவாலாக இருக்கும். இந்த சூழலில் அவர்கள் வெளிநபர்களை வேலைக்காக பணியமர்த்துவார்கள். செலவைக் குறைக்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் நாமும் பயன்பெறலாம்.