பெண்கள் நலனுக்கு இத்தனை திட்டங்கள் உள்ளதா? – முழு விவரம் இதோ!

தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வரும் நிலையில் இது குறித்து பொதுமக்கள பலரும் அறிந்து கொள்ளாத நிலையே நீடித்து வருகிறது.

சிறப்பு திட்டங்கள்:

தமிழக அரசு மாநிலத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகை அவர்களின் வாழ்வின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமூக நலத்துறை மூலமாக பெண்களின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் குறித்தான விவரங்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் திருமணமான தம்பதிகளுக்கு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலனடைய முடியும். ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூபாய் 25000, இரண்டு குழந்தைகளுக்கு ரூபாய் 50,000 இத்திட்டத்தில் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூபாய் 72000 திற்குள் உள்ள இரண்டாவது குழந்தைக்கு ஒரு மூன்று வயதிற்கு உட்பட்டு உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற திருமண நிதியுதவி திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த தாய், தந்தையரை இழந்த பெண்களுக்கு திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.


ஈவேரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம் வாயிலாக 18 வயது பூர்த்தி அடைந்த விதவையின் மகளாக உள்ள பட்டப் படிப்பு அல்லது பட்டைய படிப்பு பயின்ற பெண்களுக்கு திருமணத்திற்கு ரூபாய் 25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும். மணமகளின் தாயாரிடம் இத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம் வாயிலாக ரூபாய் 25000 மற்றும் 4 கிராம் தங்கம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கும், பட்டய படிப்பு படித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 மற்றும் 4 கிராம் தங்கம் திருமணம் ஆன ஆறு மாதத்திற்குள் விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும்.

இதே போல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டத்தின் மூலமாக 18 வயது பூர்த்தி அடைந்த, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ரூபாய் 50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் அடைவதற்கு பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவரும் மற்ற பிரிவை சேர்ந்த ஒருவரும் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் குறித்து அரசின் அதிகாரப்பூர்வ தளங்களில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments