இஸ்ரோ சேட்டிலைட் சென்டரில் வேலை..224 காலியிடங்கள்.. ரூ.55,100 வரை சம்பளம்..

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

மத்திய விண்வெளி ஆராய்ச்சி துறை – இஸ்ரோ

பணியின் பெயர்∶

இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Navik(General Duty) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,Navik(General Duty) பணிக்கான 260 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 27.02.2024

சயின்டிஸ்ட் என்ஜினீயர்:

இந்த பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எம்இ, எம்டெக், பிஇ, பிடெக் முடித்து மெக்கட்ரானிக்ஸ் முடித்திருக்க வேண்டும். எம்எஸ்சி என்ஜினீயரிங், மெட்டீரியல்ஸ் என்ஜினீயரிங், மெட்டீரியல் சயின்சய், மெட்டராலர்ஜிக்கல் என்ஜினீயரிங், பாலிமர் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, கணிதம், அப்ளைட் கணிதம், இயற்பியல், அப்ளைட் இயற்பியல் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

டெக்னீசியன் – பி:

இந்த பணிக்கு மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐடிஐயில் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டெக்னீக்கல் பவர், மெக்கானிக் கன்சூமர், எலக்ட்ரானிக்ஸ் அப்ளியன்சஸ், மெக்கானிக்ஸ் இன்டரஸ்ட்ரீயல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரீக்கல், எலக்ட்ரீசியன், போட்டோகிராபி, டிஜிட்டல் போட்டோகிராபி, பிட்டர், பிளம்பரம், ரெப்ஃரிஜிரேஷன் ஏப் கண்டிஷனிங், டர்னர், கார்பென்டடர், மோட்டார் வாகன மெக்கானிக், மெஷினிஸ்ட், வெல்டர் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

டிராக்ட்ஸ்மேன்-பி:

Draughtsman – B பணிக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐடிஐயில் Draughtsman மெக்கானிக்கல், Draughtsman சிவில் டிரேட் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

டெக்னீக்கல் அசிஸ்டென்ட்:

இந்த பணிக்கு மொத்தம் 55 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரி்ங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

சயின்டிபிக் அசிஸ்டென்ட்:

இந்த பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஎஸ்சி வேதியியல், இயற்பியல், அனிமேஷன் மல்டி மீடியா, கணிதம் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் லைப்ரேரி அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். எம்எஸ்சி லைப்ரேரி சயின்ஸ், லைப்ரேரி அன்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் அல்லது அதற்கு நிகரான படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

பிற பணிகள்:

சமையல் பணிக்கு 4 பேர், ஃபயர்மேன் ஏ பணிக்கு 3 பேர், டிரைவர் பணிக்கு 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சமையல் பணிக்கு 5 ஆண்டு சமையல் தொழிலில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஃபயர்மேன் பணிக்கு திடகாத்திரமான உடலுடன் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பாஸ் செய்தவர்கள் விண்ணப்ப்ம செய்யலாம். டிரைவர் பணிக்கு லைட், ஹெவி லைசென்ஸ் வைத்து குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

சயின்டிஸ்ட் என்ஜினீயர் பணிக்கு 30 வயதுக்குள், டெக்னீக்கல் அசிஸ்டென்ட், லைப்ரேரி அசிஸ்டென்ட், டெக்னீசியன் பி, டிராக்ட்ஸ்மேன் பி, சமையல் தொழிலாளி, டிரைவர், பணிகளுக்கு 35 வயதுக்குள்ளும், ஃபயர்மேன் ஏ பணிக்கு 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி என்றால் 3 வயது வரையும் வயது தளர்வு என்பது வழங்கப்படும்.

சம்பள விவரங்கள்:

சயின்டிஸ்ட் என்ஜினீயர் பணிக்கு மாதம் ரூ.56,100 சம்பளமாக வழங்கப்படும். டெக்னீக்கல் அசிஸ்டென்ட், லைப்ரேரி அசிஸ்டென்ட் பணிகளுக்கு மாதம் ரூ.44,900 சம்பளமாக வழங்கப்படும். டெக்னீசியன் பி, டிராக்ட்ஸ்மேன் பி பணிகளுக்கு மாதம் ரூ.21,700 சம்பளமாக வழங்கப்படும். சமையல் தொழிலாளி, டிரைவர், ஃபயர்மேன் ஏ பணிகளுக்க மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். இதுதவிர பிற அலோவன்ஸ் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை∶

இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணியமர்த்தப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பெங்களூர் மற்றும் கர்நாடகா ஹாசனில் உள்ள மையங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

Application Fee:

விண்ணப்ப கட்டணமாக ரூ.100 முதல் ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணியை பொறுத்து விண்ணப்ப கட்டணம் மாறுபடும். முழுவிபரம் கீழே உள்ள அதிகாரப்பூர் அறிவிப்பில் தரப்பபட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை∶     

 தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in, www.ursc.gov.in, wwww.istrac.gov.in ஆகிய இணையதளங்கள் வழியாக மார்ச் மாதம் 1ம் தேதிக்குள் ஆன்லைனில் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.

Download Notifications PDF

Apply online

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments