மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக ஜூலை 23ஆம் தேதி 2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பொதுத் தேர்தலுக்குப் பின் வரும் முதல் பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது
இந்த பட்ஜெட் நாட்டின் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நிதியமைச்சர் வரி அடுக்குகளிலும், நாட்டில் வேலை வாய்ப்புகளிலும் சில மாற்றங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு நாட்டில் சாலைகள், ரயில்வே மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகியவற்றில் கூடுதல் முதலீடுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.