டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள்.. விமான நிலைய வேலைகள்..

தமிழ்நாடு தாட்கோ சார்பில் முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2 ஏ ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதேபோல் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு விமான நிலைய பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) சார்பில் முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2 ஏ ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2 ஏ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேருவதற்கு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 வயது முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகையும் தாட்கோவால் வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம்” இவ்வாறு கலெக்டர் சுப்புலெட்சுமி கூறினார்.

அதேபோல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு விமான நிலைய பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது என சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், ” தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால், விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த அடிப்படை படிப்பு, சுற்றுலா துறையின் அடிப்படை படிப்புகள் மற்றும் விமான பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற12-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். மேலும், இப்பயிற்சிக்கான 6 மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையான ரூ.95 ஆயிரமும் தாட்கோ சார்பில் வழங்கப்படும்.மேலும், பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

தனியார் விமான நிறுவனங்களிலும், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். இத்திட்டத்தின் கீழ் 55 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, முதற்கட்டமாக 46 நபர்கள் முன்னணி விமான நிறுவனங்கள் மற்றும் சேவை மையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். விருப்பமுள்ள நபர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments