அஞ்சல் துறையில் ‘மெகா’ வேலைவாய்ப்பு; 65,000 பணியிடங்கள்; 10ம் வகுப்பு போதும்; எப்படி விண்ணப்பிப்பது? –

இந்திய அஞ்சல் துறை

இந்தியாவில் அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவுடன் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் ஏராளமானோர் தனியார் வேலையையே துறந்து விட்டு போட்டித் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.  இத்தகைய இளைஞர்களுக்கு பயனளிக்கும்விதமாக இந்திய அஞ்சல் துறை மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட உள்ளது. அது குறித்து பார்க்கலாம். 

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய அஞ்சல் துறை மெகா வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. அதாவது இந்திய அஞ்சல் துறை நாடு முழுவதும் பல்வேறு வட்டங்களில் உள்ள கிராமின் டாக் சேவக்ஸ் (GDS) பதவிக்கு 65,200 காலியிடங்களை நிரப்ப உள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.

வயது வரம்பு என்ன?

18 வயது முதல் முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். SC/ST: 5 ஆண்டுகள், OBC: 3 ஆண்டுகள், PwD: 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. விண்ணப்பதாரர்கள் அடிப்படை கணினி அறிவு தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மாநிலம்/பிராந்தியத்தின் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருப்பது அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை

10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சான்றிதல் சரிபார்ப்பு நடைபெறும். தேவைப்பட்டால் மருத்துவ உடற்தகுதி பரிசோதனையும் செய்யப்படும். பொது/OBC/EWS ஆகிய பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். SC/ST/PwD மற்றும் பெண்களுக்கு விண்னப்ப கட்டணம் கிடையாது.

சம்பளம் என்ன?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கும் தேதி மார்ச் 3ம் தேதி ஆகும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 28ம் தேதி ஆகும். இந்த பணியிடங்களுக்கு indiapostgdsonline.gov.in என்ற இந்திய தபால் துறையின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவகளுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.29,380 வரை சம்பளமாக வழங்கப்படும். 

இந்திய அஞ்சல் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? 

* முதலில் indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று புதிய பயனர்களுக்கான பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும். 

* உங்கள் அடிப்படை விவரங்களை உள்ளிடவும்: பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் பதிவுசெய்த பிறகு, உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும். 

* தனிப்பட்ட, கல்வி மற்றும் தொடர்பு விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். 

* கிடைக்கக்கூடிய கட்டண முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்
உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்யவும்.

* பின்பு விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப் பதிவிறக்கவும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments