திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை.. 1.80 லட்சம் சம்பளம்! இன்ஜினியரிங் முடிச்சவங்க விட்றாதீங்க

திருச்சி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் டிரெய்னி மற்றும் சூப்பர்வைசர் என மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் முதல் 1.80 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தமிழகத்திலும் திருச்சி, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ளது. நாடு முழுவதும் சுமார் 15 கிளைகளுடன் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. கனரக மின் சாதனங்கள் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

job employment

பொதுத்துறை நிறுவனம் என்பதால், இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு விதிகளின் படி அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கும். இதனால், பொதுத்துறை நிறுவனத்தில் வெளியிடும் தேர்வு அறிவிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பெல் நிறுவனத்தில் டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்:

இன்ஜினியரிங் டிரெய்னி: மெக்கானிக்கல் – 70, எலக்ட்ரிக்கல் – 25, சிவில் – 25, எலக்ட்ரானிக்ஸ் – 20, கெமிக்கல் – 05, உலோகவியல் – 05 என மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

* சூப்பர்வைசர் டிரெய்னி (டெக்னிக்கல்): மெக்கானிக்கல் – 140, எலக்ட்ரிக்கல் – 55, சிவில் – 35, எலக்ட்ரானிக்ஸ் – 20 என மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி: இன்ஜினியர் டிரெய்னி பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து இன்ஜினியரிங்/ டெக்னாலஜி படிப்பு முடித்து இருக்க வேண்டும். அல்லது ஐந்து ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த முதுகலை பட்டம் அல்லது இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டூயல் டிகிரி புரோகிராம் அல்லது டெக்னாலஜி படித்து இருக்க வேண்டும்.

சூப்பர்வைசர் டிரெய்னி பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். 65 சதவிகித மதிப்பெண்கள் அல்லது அதற்கு நிகரான CGPA -அனைத்து செமஸ்டர்களிலும் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். 01/02/1998 க்கு முன்பாக பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு:

இன்ஜினியரிங் டிரெய்னி: ரூ.60,000 – 1,80,000/-
சூப்பர்வைசர் டிரெய்னி (Technical): ரூ.33,500 – 1,20,000/-

தேர்வு முறை; கணிணி வழியிலான ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.472 செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் உள்பட இதர பிரிவினருக்கு ரூ.1072 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்; 28.02.2025 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.bhel.com/recruitment என்ற இணையதளத்தில் பார்வையிடவும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments