எந்தவித ஆவணமும் இல்லாமல் மாதம் ரூபாய் ஆயிரம் மட்டும் இஎம்ஐ செலுத்தும் வகையிலான கடன் திட்டம் குறித்த தகவல்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் திட்டம்:
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் பணம் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் GPay ஆப்பின் மூலமாக கடன் பெற முடியும் என்ற தகவல் பலருக்கும் தெரியாமல் உள்ளது.
GPay மூலமாக பயனர்கள் எளிதாக லோன் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் பரிவர்த்தணை தகுதியின் அடிப்படையில் ரூபாய் 10,000 முதல் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை கடன் தொகை பெற முடியும்.
முழுவதும் டிஜிட்டல் முறையில் நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
இதற்கு பயனர்கள் எந்தவித ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, இதற்கான மாதாந்திர இஎம்ஐ ரூபாய் 1000 முதல் தொடங்குகிறது, நீங்கள் தேர்வு செய்யும் காலத்த்தை பொறுத்து இஎம்ஐ தொகை மாறுபடும்.
ஆறு மாதங்கள் முதல் நான்கு ஆண்டுகள் வரை இஎம்ஐ செலுத்தும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
13.99% முதல் வட்டி விகிதம் உள்ளது. GPay நேரடியாக கடன் வழங்காது.
DMI பைனான்ஸ் மூலம் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.