You are currently viewing SSC தேர்வு தேதி பட்டியல் 2024 – அதிகாரப்பூர்வ வெளியீடு

SSC தேர்வு தேதி பட்டியல் 2024 – அதிகாரப்பூர்வ வெளியீடு

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் SSC தேர்வுக்கான முழு பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

 SSC தேர்வு:

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் 2024 ஆம் ஆண்டில் மே மற்றும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் SSC தேர்வுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளது. அதாவது, கட்டம்-XII தாள் I க்கான தேர்வு மே 6, 7 மற்றும் 8 ஆம் தேதி நடத்தப்படும் எனவும், கிரேடு ‘C’ ஸ்டெனோகிராபர் லிமிடெட் துறைக்கான போட்டித் தேர்வு தாள் I மே மாதம் நடத்தப்படும் எனவும், JSA/ LDC கிரேடு லிமிடெட் துறைப் போட்டித் தேர்வு தாள் I மே 10 ஆம் தேதி நடத்தப்படும் எனவும், SSA/ UDC கிரேடு லிமிடெட் துறைப் போட்டித் தேர்வு தாள் I மே 13 ஆம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தில்லி காவல் துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தாள் I தேர்வு மே 9, 10 மற்றும் 13 ஆம் தேதி நடத்தப்படும் எனவும், ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் அளவு சர்வேயிங் & ஒப்பந்தங்கள்) தேர்வு ஜூன் 4, 5 மற்றும் 6 ஆம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு குறித்தான கூடுதல் விவரங்களை அறிய ssc.nic.in என்கிற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments