
டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை அங்கீகாரம் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது பல போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டெட் தேர்வு:
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி வாரியம் TET தேர்வுக்கான பல்வேறு விதிமுறைகளை அவ்வப்போது மாற்றம் செய்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் போட்டி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர், ஏற்கனவே 10 ஆண்டுகளாக டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு, பள்ளிக் கல்வித் துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது பத்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றும் எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை என ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் நிறுத்தி வைக்கப்பட்ட ஊக்கத்தொகை மீண்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.