தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் (TNTRB) ஆனது Graduate Teacher / Block Resource Teacher Educator பணிகளுக்கு என 2023-2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள TN TRB GT / BRTE 2023 தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 07.12.2023 அன்றில் இருந்து 13.12.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கால நீட்டிப்பானது மிக்ஜாம் புயல் மற்றும் மழையின் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பாயத்தின் படி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வு விண்ணப்பிக்க தேவையான முழு தகவலும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
TN TRB GT / BRTE 2023 தேர்வு மூலம் Graduate Teacher மற்றும் Block Resource Teacher Educator பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 2582 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
TN TRB GT / BRTE 2023 தேர்வு விவரங்கள்:
Graduate Degree + Diploma, Graduate Degree + B.Ed, 12ம் வகுப்பு + B.El.Ed, 12ம் வகுப்பு + BA / B.Sc.Ed / B.A.Ed ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இத்தேர்வுக்கு 01.07.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்ச வயதானது 53 வயது முதல் 58 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
TN TRB GT / BRTE 2023 தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு நடைபெறும் முறை:
- Compulsory Tamil Language Eligibility Test
- Written Examination
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை:
இந்த ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://trb1.ucanapply.com/apply_now என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.