You are currently viewing TNPSC குரூப் 4 தேர்வு விண்ணப்பத்தில் புதிய அறிமுகம் – பதவியை நாமே செலக்ட் செய்யலாம்!

TNPSC குரூப் 4 தேர்வு விண்ணப்பத்தில் புதிய அறிமுகம் – பதவியை நாமே செலக்ட் செய்யலாம்!

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் புதிய தகவல் குறித்து இப்பதியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4:

ஜனவரி 30 ஆம் தேதி இரவு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. மொத்தம் 6244 காலி பணியிடங்கள் பல்வேறு பதவிகளுக்கும் உள்ளதாகவும், விண்ணப்பங்கள் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த ஆண்டு வெளியான அறிவிப்பில் புதிதாக வன காவலர் மற்றும் வனக்காப்பாளர் என்ற பதவிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் பலரும் விண்ணப்பிக்க தொடங்கியுள்ள நிலையில் விண்ணப்பத்தில் நாம் பணியாற்ற விரும்பும் பதவியை தேர்வு செய்து கொள்ள புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, வனக்காப்பாளர் பதவிக்கு 363 காலிடங்களும், வனக்காவலர் பதவிக்கு 814 காலியிடங்களும் உள்ளது. இவைகளில் மட்டும் சேர விரும்பினால் அதற்கான விருப்பத்தையும், அனைத்து பதவிகளிலும் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்ய தயாராக இருந்தால் அதற்கான விருப்பத்தையும், வனத்துறை பதவி வேண்டாம் என்றால் அதற்கான விருப்பத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி வாரியம் விண்ணப்ப வழிமுறை படிவத்தில் தெரிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments