இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் டிஎன்பிஎஸ்சி தேர்வின் மூலமாக 10,000 காலி பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தமிழக அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டில் நடைபெற வேண்டிய குரூப் 1, குரூப்-2, குரூப்-4 உள்பட 19 போட்டித்தேர்விற்கான அட்டவணையை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தேர்வாளர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் இந்த ஆண்டு மிகக் குறைவான காலிப் பணியிடங்களே நிரப்பப்பட இருக்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10,000 பேர் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும், குரூப் 2 குரூப் 2A தேர்வின் மூலமாக மட்டுமே 5860 தேர்வாளர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 50000 பேர் TNPSC தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.