TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2023 – தேர்வர்கள் கவனத்திற்கு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Mass Interviewer / SCW பணிகளுக்கான எழுத்து தேர்வின் தற்காலிக விடை குறிப்பையும், Forest Apprentices பணிக்கான Oral Test-க்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலையும் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNPSC விடைக்குறிப்பு / நேர்காணல் பட்டியல் 2023:

தமிழக அரசு சார்ந்த நிறுவனங்களில் Mass Interviewer / Social Case Worker பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது TNPSC தேர்வாணையத்தால் 22.09.2023 அன்று வெளியிடப்பட்டது. அதன் பின் இப்பணிகளுக்கான எழுத்து தேர்வானது 09.12.2023, 10.12.2023 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது இன்று (19.12.2023) https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் 26.12.2023 அன்று வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேர்வர்களுக்கு விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் அதனை இணையவழி மூலம் தெரிவிக்க 26.12.2023 அன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக வனத்துறையில் காலியாக உள்ள Forest Apprentices பணிக்கென நடைபெற்ற Physical Test (Walking Test) மூலம் 1:4 என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது 13.10.2023 அன்று வெளியிடப்பட்டது. இவ்வாறு தேர்வு செய்யப்பட நபர்களுக்கு Oral Test வரும் 29.12.2023 அன்று

Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Chennai – 600 003 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இத்தகைய Oral Test-க்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது

அடமானம் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன்.. முத்ரா திட்டத்தில் கடன் பெறுவது எப்படி?

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments