முதலமைச்சர் ஆராய்ச்சி முனைவர் பட்ட தகுதி தேர்விற்கான அறிவிப்பு வெளியாகி பெரிதும் கவனம் பெற்றுள்ளன. இதன்மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் பயன்பெற முடியும். அதாவது, தேர்வில் தகுதி பெறுவோருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற விரும்புவோருக்கு அருமையான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, முதலமைச்சர் ஆராய்ச்சி முனைவர் பட்ட தகுதி தேர்வு (Chief Minister Research Fellowship – CMRF) என்ற பெயரில் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அழைப்பு விடுத்துள்ளது. இதில் தேர்வு பெறுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்நிலையில் 2023-24ஆம் கல்வியாண்டில் முதலமைச்சர் ஆராய்ச்சி முனைவர் பட்ட தகுதி தேர்வு எழுத ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15 மாலை 5 மணி. மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப்படுவர். அதில் கலை, மனித வளம், சமூக அறிவியல் பிரிவில் 60 பேரும், அறிவியல் பிரிவில் 60 பேரும் அடங்குவர்.
எந்தெந்த பிரிவுகள்
அதிலும் கலை, மனித வளம், சமூக அறிவியல் பிரிவின் கீழ் தமிழ், ஆங்கில இலக்கியம் – 10 பேர், வரலாறு, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, புவியியல் – 10 பேர், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் – 10 பேர், வர்த்தகம், மேலாண்மை கல்வி, சமூகப் பணி – 10 பேர், பொருளாதாரம் – 10 பேர், ஊடகவியல், பத்திரிகை மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்,