பயனர்களின் தனியுரிமையை அதிகப்படுத்தும் வகையில் அரட்டையை லாக் செய்யும் ‘Secret Code’ அம்சத்தை WhatsApp சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. இதனால் பயனர்கள் தங்களின் Chat பகுதியை ரகசிய குறியீடு போட்டு மறைக்க முடியும். அதேபோல தாங்கள் விரும்பும்போது அதைப் பயன்படுத்தி அரட்டையை திறக்க முடியும்.
அதேபோல, WhatsApp வெப் மற்றும் WhatsApp டெஸ்க்டாப் வெர்ஷனில் போட்டோக்களையும், வீடியோக்களையும் ஒருமுறை மட்டுமே பார்க்கும் அம்சத்தை WhatsApp அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்துடன் ஏற்கனவே டெலிகிராமில் இருக்கும் சிறந்த அம்சமான ‘யூசர் நேம்’ அம்சத்தையும் இதில் கொண்டு வரப் போவதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இந்த அம்சத்தை பயன்படுத்தி மொபைல் எண் இல்லாமலேயே ஒருவரால் WhatsApp பயன்படுத்த முடியும். அதேபோல நாம் விரும்பும் நபரை WhatsApp ல் தேடி கண்டுபிடித்து அவர்களை பின்தொடர முடியும்.
மற்றொரு அம்சமாக,WhatsApp ஸ்டேட்டஸ்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பகிர முடியும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் WhatsApp சமீபத்திய அப்டேட்டில் இயங்கும் அனைத்து சாதனங்களிலும் செயல்படும். இந்த அப்டேட் கிடைக்காத பயனர்களுக்கு விரைவில் இந்த அம்சம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் வழக்கமான Instagram Story போலவே, WhatsApp ல் இருந்து பகிரப்படும் Status பார்வையாளர்களை இன்ஸ்டாகிராமில் கட்டுப்படுத்த முடியும். இதனால் தகவலை பகிர்வது எளிதாகும் என்றும் மற்ற தளங்களில் இருந்து Content பகிர்வது மேலும் எளிதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
WhatsApp வெளிவரும் பல புதிய அம்சங்கள் ஏற்கனவே டெலிகிராம் தளத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக புதிய அம்சம் என்கிற பெயரில் டெலிகிராம் தளத்தை அப்படியே காப்பி செய்து வெளியிட்டு வருகிறது whatsapp தளம். ஆனால் telegram தளத்தை விட WhatsApp தளத்திற்கு பயனர்களின் நம்பகத்தன்மை அதிகம் இருப்பதால், இதில் வெளிவரும் அம்சங்கள் அனைத்துமே பிரபலமாகிறது.
எனவே இனிவரும் இந்த ‘யூசர் நேம்’ அம்சமும் மக்கள் மத்தியில் பிரபலமாகும் எனலாம்.
Click Here to Join: