![](https://tamizhaacademy.in/wp-content/uploads/2024/01/Whatsapp-920x518-1.jpg)
உலகளவில் மக்கள் பலர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது பயனர்களை கவரும் வகையில் புதிய வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
புதிய வசதி
உலகளவில் மட்டுமில்லாமல் இந்தியாவில் அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பயனர்களின் வசதியை மேம்படுத்த மெட்டா வாட்ஸ்ஆப்பில் புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது வாட்ஸ்ஆப்பில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் play செய்யும் ஆடியோவை எதிர்முறையில் உள்ளவரும் கேட்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்இந்த வசதி தனிப்பட்ட வீடியோ கால்கள் மட்டுமல்லாமல் group கால்களுக்கும் இந்த அம்சம் பொருந்தும் என தெரிவித்துள்ளது. இது சோதனையில் உள்ளதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.