ஆண் குழந்தைகளுக்கான அருமையான போஸ்ட் ஆபிஸ் திட்டம் – உடனே சேருங்க!!

ஆண் குழந்தைகளுக்கு எதிர்காலத்திற்கு உதவும்படியான போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



போஸ்ட் ஆபீஸ் திட்டம்:
ஆண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் சேமிக்க நினைத்தால் போஸ்ட் ஆபீஸின் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அதாவது, 10 வயது பூர்த்தியடைந்த ஆண் குழந்தையின் பெயரிலேயே பெற்றோர்கள் கணக்கை ஆரம்பிக்கலாம். 10 வயதிற்கு முன்பாகவே உங்கள் குழந்தையின் பெயரில் கணக்கு துவங்க விரும்பினால் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கணக்கை துவங்கலாம். பின்னர், குழந்தைக்கு 10 வயது பூர்த்தியடைந்தவுடன் குழந்தையின் பெயரில் கணக்கை மாற்றி கொள்ளலாம்.



இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது ரூ.100 முதல் ரூ.1.5 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். மேலும், ஆண்டு வட்டியாக செல்வமகன் சேமிப்பு திட்டத்திற்கு 9.7% வழங்கப்படுகிறது. மேலும்,15 ஆண்டு முதிர்விற்கு பின்னர் முதலீடு செய்த தொகையை வட்டியுடன் பெறலாம். ஆனால், 15 ஆண்டுக்கு முன்பாகவே பணத்தை பெற விரும்பினால் நீங்கள் டெபாசிட் செய்த 60% தொகையை மட்டும்பெற்றுக்கொள்ளலாம்.

மீதமுள்ள 40% தொகையை கணக்கு முதிர்வுக்கு பிறகு வட்டியுடன் பெறலாம். நல்ல லாபத்தில் எதிர்கால தேவைக்காக சேமிக்க விரும்பினால் இப்போதே இந்த திட்டத்தில் இணைந்து சேமிக்க துவங்குங்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments