சென்னையை நோக்கி அடுத்த புயல் வருவதாக சொல்லப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் கடந்த 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த திங்கள் கிழமை தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.
சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல் தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான விவரங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்: அவர் செய்துள்ள போஸ்டில், 1976, 1985, 1996, 2005, 2015 மற்றும் 2023 – ஆகியவை சென்னைக்கு வெள்ளமான வருடங்கள்- சென்னை சிட்டியில் 2000 மிமீ மழை இந்த வருடம் பெய்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் 48 மணி நேரத்தில் (230 மற்றும் 239 மிமீ) 469 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதில் பெரும்பாலானவை ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் இரவு வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை. முழு நகரமும் 400-500 மிமீ மழையைப் பெற்றது, இதில் பெரும்பாலானவை 24 மணி நேரத்தில் பெய்தது.
ஆவடி மோசமான மழை: ஆவடி மிக மோசமான மழையை பதிவு செய்துள்ளது. அங்கு 564 மிமீ (276 மற்றும் 278 மிமீ) ஆகும். பூந்தமல்லி பகுதியில் 483 மிமீ (141 மற்றும் 342 மிமீ) மழை பெய்துள்ளது இதனால், மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தாம்பரம் 409 மி.மீ (173 மற்றும் 236 மி.மீ) அடையாறு ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்பில் மழை பெய்துள்ளது. அடையாறு ஆறும் நிரம்பி வழிகிறது. 3-வது கொசஸ்தலையாற்றில் வந்து கரைபுரண்டு ஓடுகிறது. பூண்டியில் இருந்து ஒரு கட்டத்தில் 45000 கனஅடி திறந்து விடப்பட்டது.
இந்த மழையின் அனைத்து வரலாற்று புள்ளிவிவரங்களையும் வழங்க முயற்சி செய்கிறோம். மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஆண்டுகளுடன் 2023ம் ஆண்டும் கண்டிப்பாக நினைவில் இருக்கும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்
புயல் இல்லை: சென்னையை நோக்கி அடுத்த புயல் வருவதாக சொல்லப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதில், சென்னையை நோக்கி அடுத்த வாரம் புதிய புயல் உருவாகியுள்ளதாக உலா வரும் வதந்தி அடிப்படையற்றது; அதுபோன்ற தகவல்களை நம்ம வேண்டாம் அரபிக் கடல் பகுதியில் காற்றத்தழுத்த தாழ்வுநிலை 10ம் தேதி உருவாகி இந்திய கடற்பகுதியை நோக்கி வரலாம்; ஆனால், அதனால் சென்னைக்கு பாதிப்பு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு மழை: சென்னையை டிசம்பர் 4, 5 ஆம் தேதிகளில் பெய்த மழையால் சென்னையே தத்தளித்து வருகிறது. இரு தினங்களையும் சேர்த்து 638 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்த புள்ளி விவர பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மழையை அப்படியே மீண்டும் நினைவுபடுத்திவிட்டது இந்த ஆண்டு பெய்த பேய்மழை. சென்னை நுங்கம்பாக்கத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி 230 மி.மீட்டர் மழையும் 5 ஆம் தேதி மழையும் 238 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. சென்னையில் பெய்த இந்த பெருமழையே சென்னையை வெள்ளக்காடாக்க காரணமாகிவிட்டது, என்றுள்ளார்
Click Here to Join: