ஸ்டோக்ஹோம்: நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று, நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், நடப்பு ஆண்டில் இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பியரி அகோஸ்டினி, பெரென்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய 3 பேருக்கு நடப்பு ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.