உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில், இந்திய அணி தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் அசைக்க முடியாத அளவில் முதல் இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 243 வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து 8-வது வெற்றி பெற்றுள்ளது
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்று நடப்பு உலகக் கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணியாக இந்தியா வலம் வருகிறது.
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா என்று 8 அணிகளை வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமல்ல இந்திய அணி முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தற்போது உலகக் கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் இந்தியா 8 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா 8 போட்டிகளில் விளையாடி 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா 7 போட்டிகளில் விளையாடி 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 5-வது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 6-வது இடத்தில் உள்ளது.
இலங்கை 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
நெதர்லாந்து 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 8-வது இடத்தில் உள்ளது.
வங்கதேசம் 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து 7 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 9-வது இடத்தில் உள்ளது.
Click Here to Join: