தமிழக மாணவர்களுக்கு கிடைச்ச சூப்பர் வாய்ப்பு…

  • உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக மாணவர்களுக்காக மாநில அரசு முக்கியமான ஒரு விஷயத்தை முன்னெடுத்துள்ளது.
  • உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக மாணவர்களுக்காக மாநில அரசு முக்கியமான ஒரு விஷயத்தை முன்னெடுத்துள்ளது.
  • இதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதுதொடர்பான தேதி தற்போது வெளியிடப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி கற்கும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன.
  • திறமை இருந்தும் வறுமை காரணமாகவோ அல்லது போதிய நிதி இல்லாத காரணத்தாலோ குறிப்பிட்ட படிப்பை படிக்க முடியாமல் போய் விடக் கூடாது.
  • எனவே தான் உயர்கல்வி படிப்பிற்கு கடன் வழங்கும் திட்டம் அமலில் இருக்கிறது. நம்முடைய வீட்டிற்கு அருகிலுள்ள வங்கிக்கு சென்று கல்விக் கடன் பெற முடியும்.

கல்வி கடன் பெறும் வசதி:

  • 10ஆம் வகுப்பு படித்தவர்கள் டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளில் சேரவும், 12ஆம் வகுப்பு படித்தவர்கள் பட்டப்படிப்பு படிக்கவும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்து கொண்டிருப்பவர்களும், முதுகலை படித்து கொண்டிருப்பவர்களும் கல்வி கடன் பெற முடியும்.
  • அதுமட்டுமின்றி வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க விரும்பும் நபர்களும் கல்வி கடன் பெறலாம்.

சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு:

  • தற்போதைய சூழலில் பல்வேறு கல்லூரி படிப்புகளின் கட்டணம் பெரிதும் உயர்ந்துள்ளது.
  • இதனால் ஓராண்டிற்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தும் நிலை காணப்படுகிறது.
  • இவர்களுக்கு கல்வி கடன் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
  • இதற்கான வசதி வாய்ப்புகளை தமிழக அரசு முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறது.
  • அந்த வகையில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கல்வி கடன் கிடைக்கும்?

  • இதன்மூலம் கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், மெடிக்கல், நர்சிங் போன்ற பல்வேறு படிப்புகளில் சேரும் மற்றும் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மாவட்ட அளவில் நடைபெறும் இந்த முகாமில் 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இதுதொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனி ஸ்டால்கள் போடப்பட்டிருக்கும்.

தமிழக அரசு நடவடிக்கை:

  • அங்கு நேரில் சென்றால் கல்வி கடன் பெறுவது தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
  • கல்வி கடன் பெறுவதற்கான விண்ணப்பம் முதல் கல்வி கடன் தொகை கைக்கு வருவது வரை அனைத்தையும் தெளிவாக விளக்குவர்.
  • இந்த சிறப்பு முகாமில் தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் இ-சேவை மையத்தை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
  • இவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், அதை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைப்பர்.

15 ஆண்டுகள் வரை அவகாசம்:

  • சிறப்பு கல்வி கடன் மூலம் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கல்வி கடனை பொறுத்தவரையில் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் பெற முடியும்.
  • இந்த கடனை திருப்பி செலுத்த 15 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.
  • படிப்பு முடித்தவுடன் ஓராண்டிற்கு மட்டும் தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

கல்வி கடன் பெற தகுதிகள்:

  • அதன்பிறகு கடன் தவணையை செலுத்த ஆரம்பித்து விட வேண்டும்.
  • சில வங்கிகள் குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்குகின்றன. அவற்றை தேர்வு செய்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
  • மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் படிக்க வேண்டியது அவசியம்.
  • தங்கள் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் மாணவர்கள் பெற்றிருப்பது கடன் பெறுவதற்கு ஒரு தகுதியாக பார்க்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments