You are currently viewing பான் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

பான் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்தை எவ்வாறு அப்டேட் செய்வது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பான் அப்டேட்:

நிரந்தர வங்கி கணக்கு மற்றும் அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது.

எனவே, பான் கார்டினை பிழையில்லாமல் பெயர், முகவரி, மொபைல் எண் என அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றதா என சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், பான் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமானால் உடனே ஆன்லைன் வழியாக திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.

தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மாற்றி அப்டேட் செய்வது என்பதனை பார்க்கலாம்.

முதலில், NSDL ன் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பான் டேட்டாவில் மாற்றம் அல்லது திருத்தம் என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்

இதன் பின்னர், category type என்பதை கிளிக் செய்து Individual விருப்பத்தை தேர்வு செய்யவும்.

பின்பு, Captcha Code ஐ உள்ளிட்டு Submit கொடுக்கவும்.

பின்னர், KYC விருப்பத்தை தேர்வு செய்து புகைப்படம் பொருந்தவில்லை மற்றும் கையொப்பம் பொருந்தவில்லை என்பதை டிக் செய்து தந்தை அல்லது தாயின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதனையடுத்து, PAN Card Signature Change அல்லது Photo Update என்பதை கிளிக் செய்து தேவையான விவரங்களை பதிவு செய்து Submit கொடுக்க வேண்டும்.

இதன் பின்னர், பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மாற்றுவதற்கு ரூபாய் 101 தொகையை செலுத்த வேண்டும்.

இதன் பின்னர், விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வருமான வரித்துறையின் பான் சேவை பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.

இதன் பின்னர், ஓரிரு நாட்களில் உங்களது பான் கார்டு அப்டேட் செய்யப்பட்டுவிடும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments