உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டு வரும்நிலையில், இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? நிபந்தனைகள் என்னென்ன? என்பதைப் பற்றி அறிந்துக்கொள்ளலாம்
வறுமைக் கோட்டிற்குகீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த திட்டம்தான், உஜ்வாலா யோஜனா 2.0 திட்டமாகும்.. உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில், கடந்த 2016ல் பிரதமர் மோடியால், கொண்டுவரப்பட்ட திட்டம் இதுவாகும்..
பெண்கள்: வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் உஜ்வாலா யோஜனா திட்டமாகும். இதற்காகவே, மத்திய அரசு ரூ.8,000 கோடியை ஒதுக்கி செயல்படுத்திவருகிறது.
இந்த திட்டத்தினால் நாடுமுழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவே பயனடைந்து வருகிறார்கள். அதன்படி, ஒவ்வொரு புதிய பயனாளிக்கும் ரூ.1,600 நிதியுதவியும் தரப்படுவதால், பயனாளிகள் இதை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.. கேஸ் சிலிண்டரை நிரப்பி கொள்வது அல்லது எல்பிஜி அடுப்பு பெற்றுக்கொள்ளலாம். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டம் உள்ள நிலையில், எளிதில் நாம் இதன் மூலம் பயனடையலாம்
இலவச சிலிண்டர் பெற தகுதியானவர்கள்?
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின்கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற முடியும்… விண்ணப்பிக்கும் பெண், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அதேபோல, அவருக்கு இதுவரை சமையல் சிலிண்டர் இணைப்பு எதுவும் இல்லாதிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். இவ்வளவு தகுதியும் இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
இதைத்தவிர, பட்டியல் வகுப்பு/பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழுள்ளவர்களும் இந்த திட்டத்தின்மூலம் பலன்பெறலாம்.
தேவையான ஆவணங்கள்:
எப்படி விண்ணப்பிப்பது
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் ஆர்வமுள்ள தகுதியான BPL விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள LPG விற்பனை நிலையம் அல்லது விநியோக மையத்திற்குச் சென்று பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைக் கேட்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளமான – www.pmuy.gov.in என்ற வெப்சைட்டிற்குள் சென்று, உஜ்வாலா 2.0 திட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் – விண்ணப்ப படிவத்தில் கேட்டுள்ள, பெயர், முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். – இப்போது, அடையாள ஆவணங்கள் அனைத்தையும் அப்லோடு செய்ய வேண்டும் – இறுதியில், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்: விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண், தொடர்பு விவரங்கள், சேமிப்பு கணக்கு எண், தொடர்பு விவரங்கள் மற்றும் கடைசிப் பக்கத்தில் உள்ள அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் 5KG அல்லது 14.2 KG சிலிண்டரை தேர்வு செய்யலாம்
விண்ணப்பதாரர்: இணைக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அந்த பகுதியிலுள்ள எல்பிஜி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்… அதற்கு பிறகு, LPG கள அதிகாரிகள் விண்ணப்பதாரரின் விவரங்களைச் சரிபார்த்து, தகுதியை உறுதிப்படுத்த, SECC (சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதிக் கணக்கெடுப்பு) தரவுகளுடன் அவற்றைப் பொருத்துவார்கள். விண்ணப்பதாரர் தகுதியானவர் என கண்டறியப்பட்டவுடன் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். விண்ணப்பதாரர் அடுப்பு செலவு மற்றும் முதல் நிரப்புதலின் விலையை ஈடுகட்ட EMI விருப்பத்தையும் தேர்வு செய்யலாம்.
சேமிப்புக்கணக்கு: எல்பிஜிக்கான மானியங்கள் தேவைப்படும் பெண்களின் சேமிப்புக் கணக்குகளில் நேரடியாக வழங்கப்படும், இதனால் ஊழல் நடைமுறைகள் தவிர்க்கப்படும். இந்த நடவடிக்கை குறிப்பாக கிராமப்புறங்களில் சேமிப்பு கணக்கு விண்ணப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Click Here to Join: