You are currently viewing பெண்களே முதலாளியாக வேண்டுமா..? இந்தாங்க உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட திட்டம்..!!

பெண்களே முதலாளியாக வேண்டுமா..? இந்தாங்க உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட திட்டம்..!!

பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. பெண்கள் தங்களது சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதில் உத்யோகினி திட்டம் மத்திய அரசின் மறைமுக திட்டமல்ல. இந்தத் திட்டத்தை மத்திய அரசின் அறிவுரைப்படி வங்கிகள் நடைமுறைப்படுத்துகின்றன.

பெண்களுக்கான இந்த திட்டத்தை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்துகின்றன. இந்த திட்டத்தின் கீழ் சிறிய, பிசினஸ் ரீடெய்ல், விவசாயப் பணிகளுக்காக கடனைப் பெறலாம்.

பெண்கள் தங்களது சிறிய தொழிலுக்கு முதலீடு செய்வதற்காக வட்டி இல்லாத கடனை உத்யாகினி திட்டத்தின்கீழ் பெறலாம். மத்திய அரசு அறிமுகப்படுத்திய உத்யோகினி திட்டத்தின்படி பெண்கள் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கலாம்.

இதன் மூலம் 88 வகையான சிறிய தொழில்களைச் செய்யலாம். கடன் விண்ணப்பதாரரின் தகுதிக்கேற்ப ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி பெண்கள் மற்று விதவைகளுக்கு கடன் உச்ச வரம்பு இல்லை.

அவர்களது தகுதி மற்றும் தொழிலுக்கேற்ப அதிக கடன்களைப் பெறலாம். உத்யோகினி திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு பெண்களுக்கு 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அதிகபட்சமாக ரூ.3 லட்சம் கடன் கிடைக்கும். இந்தத் திட்டத்தின்கீழ் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு கடன் வழங்கப்படும். ஏற்கெனவே தொழில் செய்து வரும் பெண்களுக்கும் இந்த கடன் தரப்படும்.

உத்யோகினி திட்டத்தை முதன்முதலில் கர்நாடக மாநில அரசுதான் அறிமுகப்படுத்தியது. பின்னர் இந்தத் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியது.

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், தலித் இனப் பெண்களுக்கு முழுக்க வட்டி இல்லா கடன் தரப்படும். பிற வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு 10 முதல் 12 சதவீதம் வட்டி விதிக்கப்படும்.

இத்துடன் குடும்பத்தின் ஆண்டு வருவாய்ப் படி 30 சதவீத மானியமும் அளிக்கப்படுகிறது. இதற்கு முன் இந்தக் கடனைப் பெற்று விட்டு திரும்பச் செலுத்தாமல் இருந்தாலோ அல்லது பகுதி தொகையை செலுத்தாமல் இருந்தாலோ மீண்டும் கடன் தரப்படாது.

உத்யோகினி திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு கீழ்கண்ட ஆவணங்களை தரவேண்டும்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களும் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் பெண்ணின் ஆதார் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ரேஷன் கார்டு நகலை இணைக்க வேண்டும்.

வருமான சரிபார்ப்பு கடிதம் குடியிருப்பு சான்று சாதி சரிபார்ப்பு சான்றிதழ் வங்கி கணக்கு பாஸ்புக் மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்க, முதலில், வங்கியிலிருந்து உத்யோகினி கடன் படிவத்தை எடுக்கவும்.

அல்லது நீங்கள் விரும்பினால், தொழில்முனைவோர் சம்பந்தப்பட்ட வங்கியின் இணையதளத்தில் இருந்து கடன் படிவத்தையும் பதிவிறக்கம் செய்யலாம்.

படிவத்தை எடுத்த பிறகு, படிவத்தை முழுமையாக நிரப்பவும். படிவத்தை நிரப்ப, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகல்களையும் ஒருவர் சமர்ப்பித்து உத்யோகினி கடன் படிவத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, நீங்கள் வழக்கமாக வங்கிக்குச் சென்று உங்கள் கடன் எப்போது அங்கீகரிக்கப்படுகிறது என்று விசாரிக்க வேண்டும்.

உத்யோகினி திட்டத்தின் கீழ் கடன் பெற பெண்கள் உள்ளூர் வங்கிகளை அணுக வேண்டும். சில தனியார் நிதி நிறுவனங்களும் உத்யோகினி திட்டத்தின் கீழ் கடன் வழங்குகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments