அக்டோபர்- 16 மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சித்தார்த் மிருதுள் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.
மணிப்பூரில் வன்முறை உச்சக்கட்டத்தில் இருந்த கடந்த ஜீலை மாதத்தில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுள் அவர்களின் பெயரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி T.Y.சந்திரசூட் அவர்களின் தலைமையில் நீதிபதிகள் S.K.கொளல் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் உள்ளடக்கிய உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரந்துரைத்தது.
புதுடெல்லி: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுலை நியமிக்க ஜூலை 5ம் தேதி கொலிஜியம் பரிந்துரை செய்து இருந்தது. ஆனால் ஒன்றிய அரசு தாமதம் செய்தது. இதுதொடர்பான வழக்கில் அக்.9ம் தேதி ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் மீண்டும் அவரது பெயரை ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதை ஏற்று மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக சித்தார்த் மிருதுலை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.