You are currently viewing மத்திய அரசின் 5 லட்ச ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை!!!

மத்திய அரசின் 5 லட்ச ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை!!!

Ayushman Bharat Health Card

தமிழக அரசு மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. அது ஏழை எளிய மக்களின் உயிரைக் காப்பாற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல மத்திய அரசும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ காப்பீட்டை மக்களுக்கு வழங்குகிறது. அது நிறைய பேருக்கு தெரிவதில்லை. அதை மிக எளிதாக விண்ணப்பித்து இலவசமாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அது பற்றிய விவரங்களை வாங்க தெரிஞ்சிக்கலாம்.

மத்திய அரசின் 5 லட்ச ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை உங்களுக்கு வேண்டுமா?

மருத்துவக் காப்பீடு என்பது மிக அவசியமான ஒன்று. இப்பொழுது உள்ள காட்டங்களில் நம் மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகள் மிக அதிகம். அதை நம்முடைய வருமானத்திலோ சேமிப்புக்குள்ளோ அடக்கவே முடியாத பொருளாதார நிலைமையில் தான் இந்தியா இருக்கிறது. ஆனால் மருத்துவக் காப்பீடு என்பது மிக இன்றியமையாத ஒரு தேவை. அதனால் தான் அரசாங்கமே மருத்துவ சேவைகள் பலவற்றை மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் முயற்சிகளையும் அதற்கான திட்டங்களையும் மேற்கொள்கிறார்கள்.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

மத்திய அரசு ஆயுஷ் மான் பாரத் யோஜனா என்னும் மருத்துவ சேவைக்கான திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்துக்காக ஆண்டுக்கு 8000 கோடி ரூபாய்க்கும் மேலாக மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக மத்திய அரசால் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கிடைக்கும் பயன்கள் என்னென்ன

தமிழக அரசால் வழங்கப்படுகிற மருத்துவ காப்பீடு போலவே மத்திய அரசின் இந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 5 லட்ச ரூபாய் வரைக்கும் மருத்துவ சேவைகளைப் பெற முடியும்.

தமிழகத்தின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் ஆயுஷ்மான் யோஜனா திட்டமும் இணைத்து செயல்படுத்தப்படுகிறது.

1354 சிகிச்சை திட்டங்கள் இதற்குள் அடங்கும். இதில் பல நவீன சிகிச்சைகளும் உள்ளடக்கம்.

17000 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுவதிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சேவையைப் பெற முடியும்.

பல் சம்பந்தப்பட்ட பிரச்சினை, மன ஆரோக்கியம் தொடங்கி இதய அறுவை சிகிச்சைகள் வரை பல்வேறு நவீன சிகிச்சைகளையும் இந்த திட்டத்தின்கீழ் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு விண்ணப்பிப்பது மிக எளிது தான். இதற்கான வழிமுறைகள் இதோ….

முதலில் healthid.ndhm.gov.in என்னும் மத்திய அரசின் இணைய தளத்துக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த இணையதளத்துக்குள் நுழைந்ததும் create ABHA number என்று இருக்கும். அந்த எண்ணை பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசன்ஸை ஆதாரமாகக் கொடுக்கலாம்.

ஆதார் எண்ணை வைத்து உள் நுழையும்போது உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இந்த எண்ணை பதிவிட்டு உள்ளே போக வேண்டும்.

உள்ளே நுழைந்ததும் உங்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை தோன்றும். அதில் உங்களுடைய தகவல்களை பூர்த்தி செய்து உங்களுக்கான மத்திய அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் ஹெல்த் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். உடனே அப்ளை செய்து மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் பயன் பெறுங்கள்.

இதை மிகவும் எளிதாக நமது கம்பூயூட்டரில் Apply செய்து கொள்ளலாம் இல்லை எனில் Browsing Center (or) இ-சேவை மூலம் Apply செய்து கொள்ளலாம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments