You are currently viewing மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் ஆனது மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதாவது தற்போது வெளியான அறிவிப்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியின் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பு குறித்த தகவல்கள்:

சென்னையில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் ஆனது புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுக்கென அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான (Paramedical Degree Courses) விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளுக்கு வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்படிப்புகளில் சேர விரும்பும் நபர்கள் tnhealth.tn.gov.in அல்லது tnmedicalselection.org என்ற இணையதள இணைப்புகளின் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 19.06.2023 அன்று முதல் 28.06.2023 அன்று வரவேற்கப்பட உள்ளது. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் சரியாக பயன்படுத்தி கொள்ளவும்.

Click Here to Jion:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments