You are currently viewing ரேஷன் கடைகளில் இனி எப்படி பொருள் வாங்க வேண்டும் தெரியுமா? தமிழக அரசின் புதிய திட்டம்

ரேஷன் கடைகளில் இனி எப்படி பொருள் வாங்க வேண்டும் தெரியுமா? தமிழக அரசின் புதிய திட்டம்

  • தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர்.
  • அதுமட்டுமல்ல, விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது. எனவே, தீபாவளியை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
  • அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
  • ரேஷன் அட்டைதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தமிழக அரசு இன்னொரு அதிரடியை கையில் எடுக்க போகிறதாம்.
  • பொதுமக்களின் நன்மைக்காக இப்படி பல்வேறு அதிரடிகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், இன்னொரு முன்னெடுப்பையும் தமிழக அரசு செய்துள்ளது.
  • அதன்படி, இன்னும் 2 மாதங்களில் கருவிழி சரிபார்ப்பு திட்டம் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரப்போகிறதாம்.
  • இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் சக்கரபாணி ஒரு பேட்டி தந்திருந்தார்.
  • கருவிழி: அப்போது அவர் சொன்னது, “பயோ மெட்ரிக் உடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
  • தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது.
  • விரைவில் இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்” என்று கூறியிருந்தார்.அதேபோல, கடந்த வாரம் திருச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, இதுகுறித்து கூடுதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
  • அதில், “ரேஷனில் விரல் ரேகை பதிவு செய்து, பொருட்களை வாங்கும் நடைமுறை உள்ளது. நம்பிக்கை: முதற்கட்டமாக, கருவிழியை பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் பெறும் நடைமுறை, 36,000 ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
  • இன்னும் 2 மாதங்களில், தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்” என்று உறுதிபட கூறியிருந்தார்.
  • இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ஒயாசிஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • பொது விநியோக திட்ட இணையதளம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடுதல், பாயின்ட் ஆப் சேல் கருவிகள் பராமரிப்பு போன்ற பணிகளை ஒயாசிஸ் என்ற தனியார் நிறுவனம்தான் இதுநாள் வரை மேற்கொண்டு வந்தது.
  • ஆனால், கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 செப்டம்வரை ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் முடிவடைய உள்ளது.
  • புதிய நிறுவனம்: எனவே, புதிய நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், 4 நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதியில், மறுபடியும் ஒயாசிஸ் நிறுவனத்திற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
  • இதையடுத்து, ரேஷன் கார்டுதாரர்களின் கருவிழியை சரிபார்த்து பொருட்கள் வழங்கும் கருவிகள், ரசீது வழங்கும் பிரிண்டர் சாதனம், புதிய விற்பனை முனைய கருவிகள் பொருத்த வேண்டும் என்றும், அதற்கான மென்பொருளை தயாரித்து 5 வருடங்கள் பராமரிக்க வேண்டும் என்றும் இந்த நிறுவனத்துக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • விரைவில் ஆரம்பம்: ஆக, டெண்டரும் முடிவாகி உள்ள நிலையில், அமைச்சர் உறுதி தந்ததுபோல, ரேஷனில் கருவிழி சரிபார்ப்பு திட்டம் விரைவில் ஆரம்பமாகும் என்றும் தெரிகிறது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments