விரிவாக்கப்பட்ட மகளிர் உரிமை தொகை.. எதிர்பாராத சர்ப்ரைஸ் தந்த தமிழக அரசு.. யாருக்கெல்லாம் பொருந்தும்?

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாதந்தோறும் ஒவ்வொரு தேதியில் வழங்கி வந்த நிலையில் அடுத்த மாத பிப்ரவரியில் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்:

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி தகுதியான மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்டமாக ஒரு கோடி 6 லட்சம் மகள்கள் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களில் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர்.

அவர்களில் 7,35,000 தகுதியானவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நவம்பர் மாதம் முதல் இந்த தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் 2024 ஜனவரி முதல் மகளிர் உரிமைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த விண்ணப்பங்களும் தற்போது பரிசளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி அவர்களுக்கும் பிப்ரவரி மாதம் முதல் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஜனவரி 10ஆம் தேதி வங்கியில் செலுத்தப்பட்டது.

அதன்படி அடுத்த மாதமான பிப்ரவரியில் இந்தத் தொகை பிப்ரவரி 15ஆம் தேதி தகுதியானவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது,

லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கவிட்டது.

இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த ஆளும் திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ரூ. 1000க்கு பதிலாக ரூ.1500 கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுக்க ஆளும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இப்போது 1 கோடியே 7 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது

நீட்டிப்பு: இந்த நிலையில்தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 19487 குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தபட்டுள்ளது.

ஏற்கனவே முகாமில் உள்ள குடும்பத் தலைவருக்கு ரூ.1500, எனைய நபர்களுக்கு ரூ.1000, குழந்தைகளுக்கு ரூ.750 மாதம்தோறும் வழங்கபட்டு வருகிறது. அதில் கூடுதலாக இப்போது இந்த தொகையும் வழங்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments